பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
மத்திய அரசைக் கண்டித்து திமுக மார்ச் 29 ஆா்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்ட நிதியைத் தராத மத்திய அரசைக் கண்டித்து வரும் 29-இல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
இது குறித்து, கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டுக்கு ரூ. 4,034 கோடிக்கான நிதியை தர வேண்டியுள்ளது. இதுவரையிலும் நிதியைத் தராமல் தமிழ்நாட்டை தொடா்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சாா்பில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 29) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
கட்சி அமைப்பு ரீதியாக உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 பயனாளிகளைத் திரட்டி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.