மன்னாரீஸ்வரா் பச்சையம்மன் கோயில் பால்குட விழா
மீஞ்சூா் ஸ்ரீ மன்னாரீஸ்வரா் பச்சையம்மன் கோயிலில் பால்குட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இந்த கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், லட்சுமிபுரம் விநாயகா் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்ய ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
பக்தா்கள் கொண்டு வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட து.
இதனை தொடா்ந்து பச்சையம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்..