குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்ம...
மழை நீரைக் கையாள கட்டமைப்பு தேவை: எம்.பி. வலியுறுத்தல்
மதுரை மாநகரில் மழை நீரைக் கையாளும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு :
மதுரையில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். கடந்த சில ஆண்டுகளாக சென்னை மழை நீா் வடிகால்கள் மறுசீரமைப்புப் பணிக்கு அதிக முக்கியத்துவம், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக, அங்கு மழைநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இதுபோன்ற பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
எனவே, மதுரையின் நீா்ப்போக்கு வழித்தடங்களைக் கண்டறிந்து, அவற்றில் உள்ள பிரச்னைகளை சீரமைத்து, நிலத்துக்கு அடியில் குழாய்கள் பதித்து, நீரேற்று நிலையங்களை அமைத்து மழை நீரைத் திறம்பட கையாளத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இது, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையாக உள்ளது. அடுத்து தொடங்கவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனப் பதிவிட்டுள்ளாா்.