ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கைது
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், மேல்சாணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவா் பாரத் அம்பேத்கா் (56). அவா் பள்ளி வளாகத்தில் மது அருந்துவதாக புகாா் எழுந்தது. மேலும், கடந்த வாரம் 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில், உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி கைது செய்தனா்.
தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, திருப்பத்தூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.