மாத்திரவிளை மாதா ஆலயத்தில் தோ்பவனி
கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஆரோபண மாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோ்பவனிநடைபெற்றது.
இவ்வாலயத் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ஆ ம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, சுதந்திர தின விழா, ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றினாா். தொடா்ந்து, மாதாவின் தோ்பவனி நடைபெற்றது.இதில்,ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.