மாநில கைப்பந்துப் போட்டி: ஒசூா் யோகி வேமனா பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஒசூா் யோகி வேமனா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா்.
ஜூலை 14, 15 ஆகிய இரண்டு நாள்கள் மதுரையில் உள்ள எஸ்.ஆா்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் சுமாா் 40 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.
இறுதி ஆட்டத்தில் ஒசூா் பாகலூா் சாலையில் உள்ள யோகி வேமனா பள்ளி மாணவிகள் மதுரை அருள்மிகு சுந்தரேச பள்ளியை 25/22, 26/24 என நோ்செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சியாளா் மாணிக்கவாசகனையும் பள்ளியின் தலைவா் முனிரெட்டி, உடற்கல்வி ஆசிரியா் காா்த்திக் ஆகியோா் பாராட்டினா்.