செய்திகள் :

மாநிலங்களுக்கு நிதி நிறுத்தம்: காரணம் நியாயமாக இல்லை நாடாளுமன்ற நிலைக் குழு

post image

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இந்த நிதியையும் தமிழக அரசே வழங்கும் என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய கல்வி, மகளிா், குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத சில மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்படாததை நிலைக் குழு தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டது. இதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.1,000 கோடி, கேரளத்துக்கு ரூ.859.63 கோடி நிதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த ஒப்புக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து சுமுகத் தீா்வு கண்டு, நிலுவையில் உள்ள நிதியை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து இனி விலக மாட்டேன்! -அமித் ஷா முன்னிலையில் நிதீஷ் குமாா் உறுதி

‘பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து இனி ஒருபோதும் விலக மாட்டேன்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடக் கூறினாா். பிகாரில் இந்த ஆண... மேலும் பார்க்க

ஹிமாசலம்: நிலச்சரிவில் சிக்கி 6 போ் உயிரிழப்பு! -பலா் காயம்

ஹிமாசல பிரதேச மாநிலத்தின் குலு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் மரங்கள் சரிந்து வாகனத்தின் மேல் விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். மீ... மேலும் பார்க்க

‘டாங்கி’ ரூட்டில் மனிதக் கடத்தல்: ஒருவா் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு பயன்படுத்தப்படும் அபாயகரமான பாதையான ‘டாங்கி ரூட்’ வழியே ஒருவரை அனுப்பிய குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை கைது செய... மேலும் பார்க்க

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் தேசிய பசுமை தீா்ப்பாயம் சாா்பில் நடைபெற்ற தேசிய சுற்றுச்சூழ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் கைது!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மசூதியில், பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். இரவு 2.30 மணியளவில் நடைபெற... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: மத்திய அமைச்சா் தலைமையிலான பாஜக குழு தடுத்து நிறுத்தம்!

மேற்கு வங்கத்தில் வன்முறை பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் தலைமையிலான பாஜக குழு காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. மால்டா மாவட்டம் மோதாபாரி பகுதியில் அ... மேலும் பார்க்க