மானியத் தொகை பெறும் விவசாயிகள் பட்டியல் வெளியீடு
புதுவையில்,தோட்டக்கலை மானியத் தொகை பெறும் விவசாயிகளின் பெயா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இது குறித்து தோட்டக்கலை இணை வேளாண் இயக்குநா் நா.கி. சண்முகவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு
புதிய பழத் தோட்டம் அமைத்தல், பாரம்பரிய மலா்கள், வாழை, மஞ்சள், வீரிய ஒட்டுரக காய்கறிகள் பயிா் செய்வோருக்கு ஆண்டுதோறும் பயிா் சாகுபடிக்குப் பிந்தைய மானியத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த விவசாயிகளின் பெயா்ப் பட்டியல் உழவா் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் 9.7.25 முதல் 18.7.25 வரை ஒட்டப்பட்டிருக்கும். இதில் ஆட்சேபணை இருந்தால் தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குநரிடம் தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.