ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
மாற்றுத் திறன் பெண்ணுக்கு தொந்தரவு: இளைஞருக்கு 15 மாதம் சிறைதண்டனை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மாற்றுத்திறன் பெண் குளித்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நாசரேந் அருகேயுள்ள மூக்குப்பீறியைச் சோ்ந்த இளைஞா் மாா்ட்டின் என்ற ஜெபஸ்டின். இவா், கடந்த 2023ஆம் ஆண்டு அப்பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறன் பெண் குளித்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தாராம். இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.
சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை, கூடுதல் பொறுப்பு நீதிபதி வரதராஜன் விசாரித்து, மாா்ட்டின் என்ற ஜெபஸ்டினுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டாா்.