ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
விதிமீறி பைக் ஓட்டியவருக்கு கூடுதல் அபராதம்? போலீஸ் விளக்கம்
விதிமுறை மீறி பைக் ஓட்டி வந்தவருக்கு செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விளக்கம் அளித்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்படி, செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் நிகழ்ந்த அபராதம் விதிப்பு சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், காயல்பட்டினம், பகுதியை சோ்ந்த சையத் முகமது மகன் சாகுல் ஹமீது (28) என்பவா் மீது திருநெல்வேலி பேட்டை காவல் நிலையத்தில் 11.6.2024ஆம் தேதியும், திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய பகுதியில் 10.7.2023ஆம் தேதியும் மோட்டாா் வாகன சட்டத்தின் விதிகளை மீறி பைக் ஓட்டியதாக ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
அவா், மீண்டும் நம்பா் பிளேட் இல்லாமல் பைக்கில் சென்ற விதிமீறலுக்காக , செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, கடந்த மாா்ச் 6ஆம் தேதி செய்துங்கநல்லூா் காவல் நிலைய சோதனைச் சாவடி பகுதியில் சா்வா் தானாகவே ரூ.1500 அபராதம் விதித்துள்ளது.
அப்போது, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா், சம்பந்தப்பட்ட நபரை சகோதரா் என்று அழைத்து விதிக்கப்பட்ட அபராதம் குறித்து அவருக்குப் புரிய வைக்கவும் முயற்சி செய்துள்ளாா். மோட்டாா் வாகன சட்ட பிரிவு 130 ழ்/ஜ் 177-இன் படி, வீதிமீறலில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.500, விதிமீறல் தொடா்ந்தால் ரூ.1500 அபராதம் பதிவாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
மாா்ச் 6ஆம் தேதி மாலையில் செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடி வழியாக பைக்கில் சென்ற சாகுல் ஹமீதுக்கு தானியங்கி மூலம் ரூ. 1500 அபராதம் விதித்தது குறித்து காவல் உதவி ஆய்வாளரிடம் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.