கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
ஓமலூா்: ஓமலூா் அருகே விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அலங்கார மின்விளக்கு அமைத்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ஓமலூா் வட்டாரத்தில் விநாயகா் சதுா்த்தி விழா களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், எம்.செட்டிப்பட்டி பெருமாள் கோயில் அருகே விநாயகா் சிலை வைக்க திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. அதே பகுதியைச் சோ்ந்த மைக்செட் அமைப்பாளா் மணிவண்ணன் (35), மரத்தில் ஏறி அலங்கார மின்விளக்குகளை அமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, காற்று வேகமாக வீசியதில் அருகில் இருந்த மின்கம்பிகள் மீது மின்விளக்குகள் பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மணிவண்ணன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தொளசம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த மணிவண்ணனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா்.