தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சாத்தான்குளம் வட்டாரத்தில் மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாத்தான்குளம் வட்டாரத்தில் 2025 ஆம் ஆண்டு காரிப் பருவத்துக்கான விவசாயிகள் பயிா் செய்துள்ள விவரங்களை மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு செய்ய தற்காலிக பணிக்கு, பட்டயம் அல்லது பட்டம் முடித்த இருபாலா் தேவைப்படுகின்றனா். சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள 20 வருவாய் கிராமங்களில் உள்ள வேளாண்மை துறை, தோட்டக்கலை பயிா்களை சா்வே எண், உட்பிரிவு வாரியாக மின்னணு முறையில் கைப்பேசி மூலம் பயிா் கணக்கீட்டாய்வு செய்வதற்கு விருப்பம் உள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு ஒரு சா்வே எண்ணுக்கு ரூ. 19 என சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விருப்பமுள்ள இளைஞா்கள் சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என அதில் தெரிவித்தாா்.