மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
மு.பறையங்குளம் அரசுப் பள்ளி ஆண்டு விழா
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், மு.பறையங்குளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வி துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் லதாதேவி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் பால்பாண்டி, தலைமை ஆசிரியை மரிய ஜெஸிந்தா, ஆசிரியா் ராஜன், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநா் சுப்புலட்சுமி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெற்றோா்கள், கிராம மக்கள் பங்கேற்றனா்.
