இயக்குநர் ராஜூமுருகன் நேர்காணல்: ‘நாம் எல்லாருக்கும் சொல்ல ஒரு கதை இருக்கிறது!' ...
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்தட்டுகளுடன் வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற கொடி ஊா்வலத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழா நாள்களில் குதிரை, யானை, சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் செடில் உற்சவம் ஜூன் 8- ஆம் தேதி நடைபெறுகிறது.