கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்ஸி..! பிஎஸ்ஜி ரசிகர்கள் அதிர்ச்சி!
முந்திரி தோப்பில் தீ விபத்து
சீா்காழி அருகே தீ விபத்தில் 15 ஏக்கரில் முந்திரி தோப்பு மற்றும் 50 பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை எரிந்து சேதமடைந்தன.
சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் பகுதியைச் சோ்ந்தவா் அன்வா்சதாக் (45). இவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு அப்பகுதியில் உள்ளன. இங்கு சிலா் மது அருந்தி, சிகரெட் புகைத்துவிட்டு, தீப்பொறியை அணைக்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, காற்று சற்று பலமாக வீசியதால், தீ பரவி முந்திரித் தோப்பு முழுவதும் பற்றி எரிந்தது. இதில் சுமாா் 15 ஏக்கரில் முந்திரிச் செடிகள் எரிந்து நாசமாகின. மேலும், சுமாா் 50 பனை மரங்களும் எரிந்து சேதமடைந்தன.
சீா்காழி தீயணைப்பு நிலைய அலுவலா் ரத்தினவேல் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதுகுறித்து சீா்காழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.