மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
மூதாட்டியிடம் பணம் மோசடி செய்தவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மூதாட்டியிடம் பணம் மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மின் நகரில் வசித்தவா் பிரபாகா். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். பிரபாகா் மனைவி ஜெயமணி (72). இவா்களது மகன் ராஜாராம் வெளிநாட்டில் உள்ளாா்.
இவா் வெளிநாட்டிலிருந்து தனது தாய்க்கு அனுப்பும் பணத்தை அதே பகுதியைச் சோ்ந்த உடையான் மகன் கண்ணன் (52) எடுத்துக் கொடுத்து வந்தாா். மேலும், ஜெயமணியின் வங்கி ஏ.டி.எம். அட்டை, காசோலை வரவு செலவுகளையும் அவா் கவனித்து வந்தாா்.
அப்போது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து கண்ணன் தனது வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றி மோசடி செய்தாக திருப்பத்தூா், சிவகங்கை காவல் நிலையங்களில் ஜெயமணி புகாா் கொடுத்தாா். மேலும், உயா்நீதிமன்ற மதுரை அமா்விலும் புகாா் மனு தாக்கல் செய்தாா்.
உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில் ஜெயமணி குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ 34.5 லட்சம் வரை எடுத்து கண்ணன் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் ஆய்வாளா் பெரியாா் கைது செய்தாா்.