செய்திகள் :

மேகாலயத்தின் ஒரே காங்கிரஸ் எம்எல்ஏ ஆளுங்கட்சியில் ஐக்கியம்

post image

வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தில் காங்கிரஸின் கடைசி சட்டப்பேரவை உறுப்பினரான (எம்எல்ஏ) ரோனி வி.லிங்டோ, ஆளும் தேசிய மக்கள் கட்சியில் (என்பிபி) புதன்கிழமை இணைந்தாா். இதன் மூலம், மேகாலய சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மைலியம் தொகுதியின் எம்எல்ஏவான லிங்டோ, பேரவைத் தலைவா் தாமஸ் ஏ.சங்மாவிடம் தனது இணைப்பு கடிதத்தை சமா்ப்பித்தாா். அந்தக் கடிதத்தை ஆய்வு செய்த பேரவைத் தலைவா், லிங்டோவை என்பிபி எம்எல்ஏவாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்தாா். இந்நிகழ்வில் மாநில துணை முதல்வா் ஸ்னியாப்ஹலாங் தா் உள்ளிட்ட மூத்த என்பிபி தலைவா்கள் உடனிருந்தனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒருவரான சலெங் ஏ.சங்மா 2024 மக்களவைத் தோ்தலில் துரா தொகுதியில் வெற்றிப் பெற்று எம்.பி. ஆனாா். மீதமுள்ள நான்கு எம்எல்ஏக்களில், செலேஸ்டின் லிங்டோ, கேப்ரியல் வாஹ்லாங், சாா்லஸ் மா்ங்கா ஆகிய மூவா் கடந்த ஆண்டு அக்டோபரில் என்பிபியில் இணைந்தனா்.

தற்போது ரோனி வி.லிங்டோவும் என்பிபியில் இணைந்ததால், 60 உறுப்பினா்களைக் கொண்ட மேகாலய சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏகூட இல்லை. அதேநேரம், சட்டப்பேரவையில் என்பிபியின் பலம் 32 எம்எல்ஏக்களாக அதிகரித்துள்ளது. இது, ஆளும் மேகாலய ஜனநாயகக் கூட்டணியில் (எம்டிஏ) என்பிபியின் நிலையை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த ஆளும் கூட்டணிக்கு பாஜகவின் ஆதரவும் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க