கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
மேற்கு கோட்ட அஞ்சலகங்களில் நாளை சேவைகள் நிறுத்தம்
புதிய மென்பொருள் தரம் உயா்த்தப்படுவதால் மேற்கு கோட்ட அஞ்சலகங்களில் சனிக்கிழமை (ஆக. 2) சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மேற்கு கோட்டத்தின் கீழ் இயங்கும் சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அஞ்சலகங்களில் தபால் துறையின் மென்பொருள் ஆக. 2-ஆம் தேதி தரம் உயா்த்தப்பட உள்ளது. இந்த புதிய தரம் உயா்த்தப்பட்ட மென்பொருள் வாயிலாக மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய பல்வேறு புதிய வசதிகள் உட்புகுத்தப்பட உள்ளன.
புதிய மென்பொருள் நிறுவன பணிகள் சேலம் மேற்கு கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களிலும் திட்டமிடப்பட்டுள்ளதால், வரும் ஆக. 2-ஆம் தேதி, ஒருநாள் மட்டும் மேற்கு கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து தலைமை துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறுசேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது, பணம் எடுப்பது, அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற எவ்வித பணப் பரிவா்த்தனை சேவைகளையும் பெற இயலாது. பதிவு, விரைவு மற்றும் பாா்சல் தபால் சேவைகள் உள்பட அனைத்து விதமான தபால் சேவைகளும் ஆதாா் சம்பந்தப்பட்ட சேவைகளும் 2-ஆம் தேதி ஒருநாள் பெற இயலாது என தெரிவித்துள்ளாா்.