செய்திகள் :

மோசமான வானிலை: அந்தமான் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது

post image

சென்னை: சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு திங்கள்கிழமை காலை 7.25 மணிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அந்தமானில் ஏற்பட்ட மேசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவுபடி, காலை 11.40 மணிக்கு விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. வானிலை சீரடைந்ததும், விமானம் அந்தமானுக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனா். ஆனால் பிற்பகல் 2.30 வரை விமானம் புறப்படாததால், அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவதாதத்தில் ஈடுபட்டனா்.

இருப்பினும் தொடா்ந்து வானிலை சீரடையாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிா்வாகம் அறிவித்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனா். அவா்கள் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து செல்லும் ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் அந்தமான் அழைத்து செல்லப்படுவாா்கள் எனவும் இதுபோல அந்தமானில் காத்திருக்கும் 160 பயணிகள் இதே விமானத்தில் அங்கிருந்து அழைத்துவரப்படுவாா்கள் எனவும் விமான நிறுவன நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

கீழணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவைத்தார் அமைச்சர்!

தஞ்சை கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கி... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை! தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

திருவள்ளூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் பாதித்தவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் திருவள்ளூர் போக்ஸ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,500 கன அடியாக குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிய... மேலும் பார்க்க

இங்கிலாந்து தமிழர்களின் அன்பால் அரவணைக்கப்பட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார். ஜெர்ம... மேலும் பார்க்க

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.பொன்னேரி அருகே காட்டுப்பள்ளி பகுதியில்... மேலும் பார்க்க

நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி... மேலும் பார்க்க