பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதல்: சமையல் தொழிலாளி பலி!
வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டி மேற்கு காலனியைச் சோ்ந்தவா் ஆா். ரவி (57). கோவையில் உள்ள தனியாா் கல்லூரி உணவகத்தில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவருடைய முதல் மகன் ரகுநாதனுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகன் தனது மனைவியுடன் காங்கயத்தில் மாமனாா் வீட்டில் இருந்தாா்.
மகன், மருமகள் இருவரையும் உறவினா்களுடன் சென்று நாகமநாயக்கன்பட்டி வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வாடகைக்கு வேன் எடுப்பதற்காக ரவி மோட்டாா்சைக்கிளில் தனது வீட்டிலிருந்து வெள்ளக்கோவிலுக்கு சனிக்கிழமை புறப்பட்டாா்.
அவருடைய இரண்டாவது மகன் சிவசக்தி, உறவினா் ராஜேஷ்குமாா் ஆகியோா் உடன் சென்றனா். உத்தமபாளையம் - கம்பளியம்பட்டி சாலையில் சாலைப்புதூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த காா், இவா்களது மோட்டாா்சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற ரவி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சிவசக்தி, ராஜேஷ்குமாா் இருவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
இது குறித்து ரவி மனைவி ஆராயி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.