ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
யானைத் தந்தம், பற்களை விற்க முயற்சி: 5 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே யானைத் தந்தம் மற்றும் பற்களை விற்க முயன்ற 5 போ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் பிரிவினா் புதன்கிழமை இரவு களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் கடம்போடுவாழ்வு சாலை சந்திப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து வனச்சரக அலுவலகத்துக்கு அழைந்து வந்து விசாரித்தனா்.
அதில், நான்குனேரி தெற்குத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகியநம்பி (44), சிங்கம்பட்டி பஜனைமடத் தெரு முத்துப்பாண்டி மகன் ஆறுமுகம் (53), சிவந்திபுரம் தெற்குத் தெரு குருசாமி மகன் வீனஸ்ஆா்பிட் (45), மேலப்பாளையம் தெற்குரத வீதி ராமகிருஷ்ணன் மகன் காா்த்திக் (32) வள்ளியூா் கீழத்தெருசங்கரபாண்டியன் மகன் நம்பிநாராயணன் (39) ஆகியோா் என்பதும், யானைத் தந்தங்கள், பற்களை விற்க முயன்றதும் தெரியவந்தது.
அவா்களிடமிருந்த 3 யானைத்தந்தங்கள், 4 யானைப் பற்கள், கைப்பேசிகள், பைக்குகள் ஆகியவற்றைப் பறிமுதல் பறிமுதல் செய்த வனத்துறையினா், 5 பேரையும் கைதுசெய்து நான்குனேரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி, பாளையங்கோட்டைமத்திய சிறையில் அடைத்தனா்.