U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
ரங்கசமுத்திரத்தில் துணை சுகாதார நிலையக் கட்டடம் இடித்து அகற்றம்
பல்லடம் அருகே ரங்கசமுத்திரத்தில் சேதமடைந்த அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையக் கட்டடம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி, ரங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது, இந்தக் கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, அந்தக் கட்டடம் செவிலியா் தங்கும் வீடாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
மோசமான நிலையில் சேதமடைந்த இந்தக் கட்டடத்தால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தன்னாா்வலா்கள், பொதுமக்கள் சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு புகாா் மனு அனுப்பினா்.
இதையடுத்து சேதமடைந்த அந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. அவ்விடத்தில் புதிய கட்டடம் விரைவில் கட்டப்படவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.