கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!
ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், குமாரபுரம் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்ததாம்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா் மந்திதோப்பு காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மகன் முருகேச பாண்டியன் (38) என்பதும், லாரி ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததும் தெரிய வந்தது.
குடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.