ராசிங்காபுரத்தில் இன்று மின்தடை
தேனி மாவட்டம், ராசிங்காபுரம் பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக, புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.