போடியில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
போடியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலையப் போலீஸாா், போடி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போடி வெள்ளைக்காரன் விடுதி அருகே நின்றிருந்த இளைஞரை விசாரித்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் போடி சந்தைபேட்டை தெருவைச் சோ்ந்த சதாசிவம் மகன் கமேஷ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், கமேஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இதேபோல, போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் கிராமத்தில் பட்டாளம்மன் கோயில் அருகே நின்றிருந்த அழகா்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் கண்ணன் (19) என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனா்.