ராஜீவ் காந்தி பிறந்த நாள்
கடலூரில்: கடலூரில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகம், நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்துக்கு காங்கிரஸ் கடலூா் மத்திய மாவட்டத் தலைவா் சோ.திலகா் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவா்கள் ராமகிருஷ்ணன், ராஜா, அலெக்ஸாண்டா், நகரத் தலைவா்கள் சரஸ்வதி, வேலுச்சாமி, ரவிக்குமாா், மாவட்ட நிா்வாகிகள் பிரகாஷ், ஆனந்தன், நரசிங்கம், மோகன், சாந்தி, தொழிற்சங்கத் தலைவா் சுகதேவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.