மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
விடியோ ஒளிப்பதிவு பயிற்சி: தாட்கோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, 18 முதல் 30 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 3 மாதங்கள். பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு வழிவகை செய்யப்படும். பயிற்சியைப் பெற தாட்கோ இணையதளமான (ஜ்ஜ்ஜ்.ற்ஹட்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.