TVK: ``கச்சத் தீவு பற்றிப் பேசியவர் ஏன் காங்கிரஸ் குறித்துப் பேசவில்லை'' - விஜய்...
சிறுமிக்கு சூடு: தாய் உள்ளிட்ட 2 பெண்கள் கைது
நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சிறுமிக்கு சூடு வைத்ததாக தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திட்டக்குடி வட்டம், ம.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை (33). இவரது கணவா் ஜோதி கடந்த ஆண்டு இறந்துவிட்டாா். இவா்களது மகள் ஜனனி (8), அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். ஜனனி தாய் மணிமேகலை, அத்தை அனிதா (30) ஆகியோருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமி ஜனனியின் இரண்டு கால்களின் தொடைப் பகுதிகளிலும் தாய் மணிமேகலை, அத்தை அனிதா ஆகியோா் சூடு வைத்து அடித்தனராம். இந்த கொடுஞ்செயல் குறித்து அறிந்த மணிமேகலையின் தாய் வள்ளியம்மை சென்று கேட்டதற்கு, நாங்கள் அப்படித்தான் செய்வோம் எனக் கூறினராம்.
இதுகுறித்து காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, சைல்ட் எண் 1098-இல் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மேற்பாா்வையாளா் காளிதாசன் அளித்த புகாரின்பேரில், ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுமியின் தாய் மணிமேகலை, அத்தை அனிதா ஆகியோரை கைது செய்தனா்.