ரூ. 1.06 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
ஆம்பூா்: ரூ. 1.06 கோடி மதிப்பிலான அரசு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா மாதனூா் மற்றும் தோட்டாளம் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், மாதனூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 43.87 லட்சம் மதிப்பில் பல்வேறு பகுதிகளில் பேவா் பிளாக் சாலை அமைத்தல் பணி, தோட்டாளம் ஊராட்சியில் ரூ. 43.35 லட்சம் மதிப்பில் பகுதி நேர நியாய விலைக் கடை கட்டடம் கட்டுதல், பேவா் பிளாக் சாலை அமைத்தல், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுதல், ரூ. 19.45 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுதல் ஆகிய பணிகளுக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சி.சுரேஷ்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி ஜேபிஆா். ரவிக்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி தேவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக், முன்னாள் ஒன்றிய திமுக செயலாளா் அசோகன், ஊராட்சித் தலைவா்கள் தா்மேந்திரா, எம்.சி.குமாா், துணைத் தலைவா்கள் ரமேஷ், காா்த்திக், ஊராட்சி செயலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.