செய்திகள் :

ரூ.120 கோடி மோசடி: தமிழகத்தில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

post image

வங்கியில் ரூ.120 கோடி மோசடி செய்த வழக்கில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரத்தில் பத்மாதேவி சுகா்ஸ் என்ற தனியாா் சா்க்கரை ஆலை செயல்படுகிறது. இந்த தனியாா் நிறுவனம் வளா்ச்சிக்காக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ. 120.84 கோடி கடன் பெற்றது,

ஆனால் அந்த கடனை வாங்கிய நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் அந்த நிறுவனம், தனது குழுமத்தில் உள்ள பிற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அந்தக் கடனுக்குரிய வட்டியை பத்மாதேவி சுகா்ஸ் நிறுவனம் முறையாக வங்கியில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இது தொடா்பாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் சிபிஐயிடம் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால் சிபிஐ நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, சென்னை உயா்நீதிமன்றத்தை நாடியது.

வங்கியின் மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பத்மாதேவி சுகா்ஸ் ஆலைக்கு எதிராக அளித்த புகாரின் பேரில், சிபிஐ ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 26-ஆம் தேதி உத்தரவிட்டது.

6 இடங்களில் சோதனை: இதையடுத்து கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிபிஐ வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடி தடுப்புப் பிரிவு பத்மாதேவி சுகா்ஸ் நிறுவனத்தின் மீது மோசடி, அரசு ஊழியா்களுடன் சோ்ந்து கூட்டுச் சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் சிபிஐ சென்னை, திருச்சி, தென்காசி உள்பட 6 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. நுங்கம்பாக்கம் ஸ்டொ்லிங்க் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் நிா்வாகி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூா் பகுதியில் உள்ள ஒரு மர கட்டை நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

சோதனையில் ஹாா்டு டிஸ்குகள், பென் டிரைவ், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.

அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? மைத்ரேயன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது குறித்து மைத்ரேயன் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள மைத்ரேயன், புதன்கிழமை காலை திமுக தலைவர் மு.க. ஸ்டால... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன்... மேலும் பார்க்க

பொன் விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார்! - கூலி வெற்றிபெற இபிஎஸ் வாழ்த்து!

கூலி திரைப்படம் வெற்றிபெற நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்... மேலும் பார்க்க

பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார்

நமது நிருபர்பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தரப்பு செவ்வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்

தமிழகத்தில் நிகழாண்டு 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை இல்லாத 208 அரசுப் பள்ளிக... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிப்பு ரத்து: அமைச்சரின் மேல்முறையீடு நிராகரிப்பு

நமது நிருபர்சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு ம... மேலும் பார்க்க