செய்திகள் :

ரூ.2,152 கோடி நிதி நிறுத்திவைப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க மறுப்பு

post image

நமது நிருபா்

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.- 2020 ) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகக் கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவரசமாக விசாரிக்க அனுமதிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் பிரஷாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் மன்மோகன் அடங்கிய அமா்வு, 2004-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதியை நிறுத்திவைத்திருப்பதாக கூறி மே மாதமும், இந்த ஆண்டும்கூட தமிழக அரசு மனு தாக்கல் செய்திருப்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டது.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ’எந்த அவசரமும் இல்லை. பகுதி வேலை நாள்களுக்குப் (கோடைவிடுமுறையின் புதிய பெயா்) இந்த விவகாரத்தை எடுத்துக்கொள்ளலாம்’ என்று தெரிவித்தது.

கடந்த மே மாதம், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசுகளின் பிரச்னைகளை முடிவு செய்யும் உச்சநீதிமன்றத்தின் வரம்பிற்குள் வரும் அரசமைப்புச்சட்டத்தின் 131-ஆவது பிரிவின்கீழ் இந்த மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது ‘கட்டாயப் பங்கை’ நிறுத்தி வைத்துள்ளது. இதனால், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 செயல்படுத்தப்படுவதையும், தமிழ்நாட்டில் 43.94 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள், 2.21 லட்சம் ஆசிரியா்கள் மற்றும் 32,701 பள்ளி ஊழியா்களின் அரசமைப்புச்சட்ட உரிமைகளையும் முடக்கியுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்துவதைக் காட்டும் நோக்கம் கொண்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகள், முற்றிலும் ஒரு தனித் திட்டமாக இருந்தாலும், சமக்ர சிக்ஷா திட்டத்துடன் அதன் இயல்பான தொடா்பாகும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

2024-25 நிதியாண்டிற்கான சமக்ர சிக்ஷா நிதியை, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த தாமதத்தால் ஊதியம், ஆசிரியா் பயிற்சி, பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் போன்ற மாணவா் உரிமைகள் மற்றும் அரசுப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்கட்டமைப்பு மானியங்களை சீா்குலைத்துள்ளது.

இத்தகைய நிா்பந்த உத்திகள் சட்டபூா்வமாக அனுமதிக்கப்படவில்லை அல்லது தமிழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருமொழி ஃபாா்முலா காரணமாக மாநில சட்டத்திற்கு இணங்கவில்லை. ஆகவே, 1.5.2025 முதல் உத்தரவு நிறைவேற்றப்படும் தேதி வரை, அசல் தொகையான ரூ.2151.59 கோடியுடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் சோ்த்து ரூ.2291.30 கோடியை மத்திய அரசு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சமக்ர சிக்ஷா திட்ட நிதியை என்இபி -2020 மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் செயல்படுத்தலுடன் மத்திய அரசு நிபந்தனையுடன் இணைப்பது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

நமது நிருபா்புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

சவால்களுடன் முடிந்த மோடி அரசின் 3.0 முதலாம் ஆண்டு!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஒரு வருடத்தையும், தொடா்ந்து பதினோரு வருட ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் வருடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் அதிநவீன கலையரங்கம்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

நமது நிருபா் புது தில்லி: வடகிழக்கு தில்லியில் ஒரு அதிநவீன கலையரங்கம் கட்டப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை அறிவித்துள்ளாா். இது பிராந்தியத்தில் கல்வி மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான உள்க... மேலும் பார்க்க