லாரி ஓட்டுநா் வீட்டில் ஏழரை பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் லாரி ஓட்டுநா் வீட்டில் புதன்கிழமை புகுந்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் வடக்கு வாசல் சுண்ணாம்பு காலவாய் தெரு பகுதி பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (41). லாரி ஓட்டுநா். இவரது வீட்டில் புதன்கிழமை காலை யாரும் இல்லாத நேரத்தில், கதவு திறந்து கிடந்த நிலையில், மா்ம நபா் புகுந்து ஏழரை பவுன் நகைகள், 220 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.