லேத் பட்டறையில் தீ விபத்து
தம்மம்பட்டி அருகே மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் லேத் பட்டறை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
செந்தாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே, பாலக்காட்டைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் லேத் பட்டறை நடத்தி வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு மின்கசிவு ஏற்பட்டு லேத் பட்டறை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.