வண்ணாா்பேட்டையில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தச்சநல்லூா் மண்டலம், 11 ஆவது வாா்டுக்குள்பட்ட வண்ணாரப்பேட்டை எட்டுத்தொகை தெருவில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நடைபெற்ற கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவுக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாநகர செயலா் (கிழக்கு) தினேஷ், மாமன்ற உறுப்பினா் கந்தன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்19க்ஷன்ண்ப்க்
வண்ணாா்பேட்டையில் புதிய ரேஷன் கடை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.