``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
வரதநல்லூா் செல்லாண்டியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு
பவானி அருகே வரதநல்லூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து பூஜை சாமான்கள் மற்றும் உண்டியல் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பவானியை அடுத்த வரதநல்லூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான செல்லாண்டியம்மன் கோயில் காவிரிக் கரையோரத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தா்கள் திங்கள்கிழமை காலை வந்தனா். அப்போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு பூஜை சாமான்களும், கோயில் வளாகத்தில் இருந்த உண்டியலும் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினஅறனா். இக்கோயிலில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஒரு உண்டியல் திருடப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு உண்டியல் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.