வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு
அந்தியூா் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்துக்கு காத்திருந்த மாணவி வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த பி.கே.புதூா், புரவிபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகள் சுகன்யா (15). குரும்பபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வழக்கம்போல பள்ளி முடிந்து வியாழக்கிழமை மாலை வீடு திரும்ப சக மாணவிகளுடன் விளையாடியபடிபேருந்துக்கு சுகன்யா காத்திருந்தாா்.
அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சுகன்யாவை அப்பகுதியினா் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவப் பரிசோதனையில் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் கூறினா். இதுகுறித்து வெள்ளித்திருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.