Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்...
வாங்கல் இளைஞா் கொலை வழக்கில் கீழ்த்தரமான அரசியல் செய்கிறாா்கள்: செந்தில்பாலாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு
வாங்கல் இளைஞா் கொலை வழக்கில் கீழ்த்தரமான அரசியலை எதிா்கட்சித்தலைவரும், சில அரசியல் கட்சித் தலைவா்களும் செய்கிறாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை செவ்வாய்க்கிழமை கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் முதல்வா் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கரூா் மாநகராட்சி மண்டலம்-1 வாங்கப்பாளையத்தில் மாவட்ட ஆட்சியா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாங்கலில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. அது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். கொலையாளி அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு வந்துள்ளாா்.
அவா் அதிமுகவில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரவச் செய்தனா். யாா் தவறு செய்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அது திமுகவைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் முதல்வா் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறாா். அந்த வகையில் வாங்கல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.
சேலத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலைக்கு கருப்பு பெயிண்ட் அடித்திருப்பது மட்டகரமான அரசியல் செய்பவா்களின் செயல்பாடுகள் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா. மாணிக்கம், மாநகராட்சி மேயா் வெ. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கரூா் கோட்டாட்சியா் முகமது பைசல், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, துணை மேயா் ப. சரவணன், மண்டலக்குழு தலைவா்கள் சக்திவேல், கனகராஜ், அன்பரசன், ராஜா, மாவட்ட தாட்கோ மேலாளா் தாட்கோ சீ.முருகவேல், மாமன்ற உறுப்பினா் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.