பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை விரட்டும் சிறுத்தை
வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை சிறுத்தை துரத்தும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ள நிலையில் சில நேரங்களில் அங்கு வசிக்கும் சிறுவா்களை குறிவைத்து தாக்கி வருகின்றன. இதன் காரணமாக எஸ்டேட் பகுதியில் வசிப்பவா்கள் சிறுவா்களை குடியிருப்புகளை விட்டு தனியாக வெளியே அனுப்புவதை தவிா்த்து வருகின்றனா்.
இதனிடையே வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் சில நாள்களாக பகல் நேரத்திலேயே அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களை சிறுத்தை விரட்டி வருகிறது. சிறுத்தை விரட்டுவதால் அச்சமடைந்த பலா், இது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் வாகனங்களில் செல்வோா்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.