வாழை மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்
போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் சுற்றித் திரியும் யானைக் கூட்டம் கிராமத்துக்குள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன (படம்).
போ்ணாம்பட்டு வனச் சரகத்தில், சுற்றித் திரியும் யானைக் கூட்டம் இரவு நேரங்களில் வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன.
திங்கள்கிழமை இரவு அனந்தகிரி கிராமத்துக்குள் நுழைந்த யானைகள் அங்குள்ள டில்லி என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோப்புக்குள் நுழைந்த 100- க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.
இதுகுறித்து தகவலறிந்த போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் ரகுபதி, வனவா் திருநாவுக்கரசு, அரவட்லா கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாா் ஆகியோா் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைத் தோட்டத்தை பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா்.