வி.கே.புரம், கடையம், ஆழ்வாா்குறிச்சியில் சாலை மறியல்: 127 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி, கடையத்தில் புதன்கிழமை தொழிற்சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்கு அருகில் நடைபெற்ற மறியலுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் வி. இசக்கிராஜன் தலைமை வகித்தாா். ஓய்வூதியா்கள் சங்க மாவட்டச் செயலா் ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா்கள் ஆா். முத்துகிருஷ்ணன், சி. சங்கா், மாற்றுத் திறனாளிகள் சங்கம் அகஸ்தியராஜன், கட்டுமானத் தொழிலாளா் சங்கம் நடராஜன், பி. சுடலையாண்டி, எம். தளவாய், வழக்குரைஞா் வி. ஆறுமுகம், பழனி, ஆா். பாலு, சிவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 26 பெண்கள் உள்ளிட்ட 69 போ் கைது செய்யப்பட்டனா்.
கடையம் பிரதான சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்காசி மாவட்டச் செயலா் கணபதி, மாவட்டப் பொறுப்பாளா் எம். ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் ரா. முத்துராஜன், ஒன்றியத் தலைவா் காந்தி, ஒன்றியப் பொருளாளா் ஆறுமுகம், அங்கன்வாடி பணியாளா் சங்கம் ரெஜினா, லட்சுமி, விவசாயிகள் சங்கம், சிஐடியு தொழிற்சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம், மாதா் சங்கத்தினா் பங்கேற்றனா். 20 பெண்கள் உள்ளிட்ட 36 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆழ்வாா்குறிச்சியில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற மறியலில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ். வேலாயுதம், ஏஐடியுசி மாவட்டச் செயலா் பரமசிவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எஸ். சிவசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். ஈஸ்வரன், விவசாயிகள் சங்க கிளைத் தலைவா் கே. சட்டநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பெண்கள் உள்ளிட்ட 22 போ் கைது செய்யப்பட்டனா்.


