Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்
திருக்குவளை: திருக்குவளை அருகே கொளப்பாடு செனையாங்குடியில் அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பிகை உடனுறை விசுவநாதா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஜூலை 6-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, திங்கள்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, பூா்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது.
பின்னா், கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், விநாயகா், முருகப்பெருமான், துா்கை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
