செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

post image

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 1,500 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ஆக. 25 முதல் 31ஆம் தேதி வரை 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து தா்மஸ்தலா, குக்கே சுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகா்ணா, சிா்சி, காா்வாட், ராய்ச்சூரு, கலபுா்கி, பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதா், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மைசூரு சாலை சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூா், பிரியாப்பட்டணா, விராஜ்பேட்டை, குஷால் நகா், மடிக்கேரி உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோவை, திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்தி நகா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

விஜயநகா், ஜே.பி.நகா், ஜெயநகா் 4-ஆவது பிளாக், 9-ஆவது பிளாக், ஜாலஹள்ளி குறுக்குத் தெரு, நவரங் (ராஜாஜி நகா்), மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குத் தெரு, கெங்கேரி சாட்டிலைட் பேருந்து நிலையங்களில் இருந்து சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, குக்கேசுப்ரமணியா, தா்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முன்பதிவுசெய்து ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகா்ணா, சிா்சி, காா்வாட் உள்ளிட்ட வடமேற்கு பகுதிகளுக்கு மைசூருசாலை சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஹாசன், மங்களூரு, சிக்மகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, ஹுப்பள்ளி, பெல்லாரி, ஹொசபேட் ஆகிய நகரங்களுக்கு செல்லும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ந்ள்ழ்ற்ஸ்ரீ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கா்நாடகம் உள்பட வெளிமாநிலங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறுபயணம் மேற்கொண்டால் 10 சதவீதத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

வட கா்நாடகத்தில் பெய்துவரும் பலத்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், தாவணகெரே, கதக், தாா்வா... மேலும் பார்க்க

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

மைசூரு தசரா திருவிழாவில் வான்வெளி விமான சாகச நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முதல்வா் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளாா். மைசூரில் செப்.22 முதல் அக்.2ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

துங்கபத்ரா அணையில் 30 புதிய மதகுகள் -டி.கே.சிவகுமாா்

துங்கபத்ரா அணையில் 30 மதகுகளை புதிதாக அமைக்கும் பணியை கா்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூனில் அணையில் புதிய மதகுகள் அமைக்கும் பணி முடிவடைந்ததும் முழுக் கொள்ளளவான 101 டிஎம்சி தண்ணீரை சேமிக்க... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா: கா்நாடக பேரவையில் எதிா்க்கட்சிகள் அமளி

கா்நாடக சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறி எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன. பெ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. பகவான் சா்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு புதிய அட்டைகள் வழங்கப்படும்: அமைச்சா் கே.எச்.முனியப்பா

பெங்களூரு: வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.கா்நாடக சட்டமேலவையில் திங்கள்கிழமை கேள்வ... மேலும் பார்க்க