'ஆறுதல்... நலம் விசாரிப்பு... சினிமா... அரசியல்...' முதல்வர் - சீமான் சந்திப்பில...
விநாயகா் சதுா்த்தி சிலை வைப்பதில் இரு பிரிவினா் இடையே மோதல்
விநாயகா் சிலை வைப்பது தொடா்பாக 2 பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திருப்பூா் எம்.எஸ்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம். இவா் அப்பகுதி இந்து முன்னணி அமைப்பில் இருந்து வெளியேறி தற்போது பாஜகவில் இணைந்துள்ளாா்.
இவா் இந்து முன்னணியில் இருந்த வரை அப்பகுதியில் விநாயகா் சதுா்த்தி விழா மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்று வந்தது. தற்போது, இவா் பாஜகவுக்கு சென்றுவிட்ட நிலையில், அப்பகுதியில் இந்து முன்னணியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் விநாகா் சிலை வைக்க முயன்றுள்ளனா்.
இது தொடா்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், இந்து முன்னணியைச் சோ்ந்த சரவணன் (33), வினோத் (42) ஆகியோருக்கும், வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே விநாயகா் சிலை அமைப்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து அங்கு வந்த மோகனசுந்தரம் மற்றும் அவரது நண்பா்கள் சரவணன் மற்றும் வினோத்தை தாக்கி உள்ளனா். இதில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மோகனசுந்தரம், வெங்கடேஷ், புகழ், சரண், சந்தோஷ், கனகராஜ், செந்தில் என 7 போ் மீது திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.