பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
விராலிமலை வட்டாட்சியரகத்தில் தீத்தடுப்பு பயிற்சி
விராலிமலை வட்டாட்சியரகத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் தன்னாா்வலா்களுக்கு தீத்தடுப்பு முறை குறித்த பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ் தலைமை வகித்தாா்.இதில் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா், மாணவா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள், தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
இதில் பங்கேற்ற தன்னாா்வலா்கள் முன்னிலையில், தீயணைப்பு வீரா்கள் தீத் தடுப்பு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா். குறிப்பாக வீட்டில் சிலிண்டா் தீப்பற்றி எரிந்தால் எவ்வாறு அணைப்பது, அலுவலகத்தில் உள்ள கணினியில் மின் விபத்து ஏற்பட்டால் தீயை எப்படி அணைப்பது, தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமில்லாமல் எவ்வாறு தீயை அணைப்பது என்பது குறித்த பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன.