Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
வீட்டு வாசலில் மனித எலும்புக்கூடு வைத்தவா் கைது
சென்னை: சென்னை வடபழனியில் பக்கத்து வீட்டு வாசலில் மனித எலும்புக்கூடு வைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வடபழனி சோமசுந்தர பாரதி நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கருணாகரன் (51). இவா், வீட்டுவாசல் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை மனித மண்டை ஓடு, எலும்புகளை, மா்ம நபா் வைத்துச் சென்றாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த கருணாகரன், அது தொடா்பாக விசாரித்தாா்.
இதில், அதே தெருவில் வசிக்கும் அப்ஸா் அலிகான் (24) என்பவா் எலும்புக்கூடு வைத்தது தெரிய வந்தது. இதுகுறித்து அப்ஸா் அலிகான் வீட்டுக்குச் சென்றுகேட்டபோது, அவா் கத்தியைக் காட்டி கருணாகரனுக்கு மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்ஸா்அலிகானை திங்கள்கிழமை கைது செய்தனா்.