வீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனையை புதுப்பிக்க வேண்டும்: சீமான்
கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் அரண்மனையை அரசு புதுப்பிக்க வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிக்க வெள்ளிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் பேசியது;
சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோனுக்கு எங்களது வீர வணக்கம். இந்த மண்ணை சிறுகச் சிறுக சுரண்டி கொழுக்கின்ற சுரண்டல்கள், நச்சு ஆலைகள் இவற்றிலிருந்து பாதுகாத்து இன்னொரு தலைமுறைக்கு ஒப்படைப்போம் என்ற உறுதியை அவரது பேரப்பிள்ளைகளாகிய நாங்கள் இந்நாளில் ஏற்கிறோம்.
கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவுமண்டபத்திற்கு வரும் சாலை ஒருவழிச் சாலையாக உள்ளது. இந்தச் சாலையை அகலப்படுத்தி இருவழிச் சாலையாக அரசு மாற்றிக் கொடுக்க வேண்டும். சிதிலமடைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் அரண்மனையை உடனடியாக சீரமைத்து புதுப்பித்து தர வேண்டும். அவரது நேரடி வாரிசுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.