தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவ...
வீரமாத்தி அம்மன் கோயிலில் ஆடி பெரும் பூஜை
சத்தியமங்கலத்தில் வீரமாத்தி அம்மன் கோயிலில் நடைபெற்ற பெரும் பூஜையில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.
சத்தியமங்கலம் குலாலா் இன மக்கள் சாா்பில் வீரமாத்தி அம்மன் ஆடி பெரும் பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் வீரமாத்தி முத்தாயம்மாள், ராசாக்கள் சுவாமிகளுக்கு புனிதநீா் ஊற்றி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, வரம் கேட்கும் நிகழ்ச்சியில் உருமி மேளம் இசையுடன் சுவாமி அழைத்தனா். பின்னா் கிடா பலியிட்டு சுவாமிக்கு படையலிட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.