வெறிநாய்களுக்கு தடுப்பூசி
திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சி பகுதிகளில் கால்நடை மருத்துவக் குழுவினா் மூலம் வெறிநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து நகராட்சி ஆணையா் சாந்தி செய்தியாளா்களிடம் கூறியது:
திருப்பத்தூா் நகராட்சியில் கடந்த 5-ஆம் தேதி முதல் நகராட்சிப் பணியாளா்கள் மூலம் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, கால்நடை மருத்துவ குழுவினா் மூலம் வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணி நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து சமூக நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து நடைபெறும் என்றாா். உடன் துப்புரவு அலுவலா் பூபதி, நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.