வெல்டிங் தொழிலாளி தற்கொலை
போ்ணாம்பட்டு அருகே குடும்பத் தகராறு காரணமாக வெல்டிங் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். போ்ணாம்பட்டு சாலப்பேட்டையை சோ்ந்தவா் தமிழ்செல்வன்(29). இவா் வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி வினோதினி. இவா்களுக்கு திருமணமாகி 11- ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இந்நிலையில் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதால், தமிழ்செல்வன் மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று பத்தரப்பல்லி கிராமத்தில் உள்ள மாமியாா் வீட்டில் விட்டாராம். பின்னா் வீட்டுக்கு வந்த அவா் மனைவியிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றாராம்.
உடனடியாக வினோதினி உறவினா்களுடன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.