வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழை தமிழா்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்
வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழக்கும் அயலகத் தமிழா் நலவாரிய உறுப்பினா் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று சிறுபான்மையினா் மற்றும் அயலகத் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் உள்ள 25 இலங்கை தமிழா் முகாம்களில் கணினி வசதிகளுடன் கூடிய படிப்பகம் ரூ.49.87 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். அயலக தமிழா் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினா்களுக்காக மருத்துவ சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும். உலகளாவிய தொழில் வாய்ப்புக்கு தமிழகத்தை மேம்படுத்தும் விதமாக ‘டிஎன் ஸ்கில்ஸ் இண்டா்நேஷனல்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
அயலகத் தமிழா் நலவாரிய உறுப்பினா் ஒருவா் வெளிநாட்டுக்குச் சென்று உயிரிழக்கும் பட்சத்தில், வறிய நிலையில் உள்ள அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் சா.மு.நாசா்.